தலைநகரம் 2: டீசர் வெளியீடு
நடிகர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2 திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2 திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் சுந்தர்.சி நடிகராக அறிமுகமான படம் தலைநகரம். சுராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது.
இந்தப் படத்தின் தொடர்ச்சியாக நகரம் என்ற படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க | பொங்கல் வைக்கும் சூர்யா - ஜோதிகா: ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். இந்தப் படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.