செய்திகள்

’பிச்சைக்காரன் - 2’ படக்குழுவினர் கைது

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

DIN

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், இப்படத்திற்காக அனுமதிபெற்று சென்னை ரிப்பன் பில்டிங், ராஜிவ் காந்தி மருத்துவமனையை டிரோன் கமெரா மூலம் படக்குழுவினர் படம்பிடித்துள்ளனர். 

ஆனால், அனுமதி இல்லாமல் சென்னை உயர்நீதிமன்ற வளாகம், பார் கவுன்சில் வளாகம் ஆகியவற்றையும் படம் பிடித்துள்ளனர். இதனைக் கண்ட காவலர்கள் டிரோனை இயக்கிய சுரேஷ், நவீன்குமார், ரூபேஷ்  ஆகிய 3 பேரைக் கைது செய்து பின் ஜாமினில் விடுவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

SCROLL FOR NEXT