செய்திகள்

‘பெண்கள் துர்கையம்மனின் உருவங்கள்’- நடிகைகளுக்கு ஆதரவளித்த திவ்யா!

தீபிகா படுகோன் ஆடை குறித்த சர்ச்சைக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

நடிகை திவ்யா கன்னட படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் சிம்புவுடன் ‘குத்து’ படத்தில் அறிமுகமானவர். பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தீபிகா படுகோன் ஷாருக்கான் நடித்த பதான் படத்திலிருந்து வெளியான பாடலில் காவி நிற ஆடை அணிந்திருப்பதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையொட்டி நடிகை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய்பல்லவி தனது கருத்தை கூறியதற்காகவும், ராஷ்மிகாவின் தனித்துவத்திற்காகவும், தீபிகா தனது ஆடைக்காகவும் மற்றும் சில பெண்கள் இப்படியாக பல காரணங்களுக்காக கேலி கிண்டலுக்கு உள்ளாகுகிறார்கள். எதைப் பேச வேண்டும், எதை செய்ய வேண்டும் என தீர்மானிப்பது எங்களது அடிப்படை சுதந்திரம். பெண்கள் கடவுள் துர்கா தேவியின் உருவங்கள். பெண் வெறுப்பு எனும் தீமைக்கு எதிராக போராட வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் விடியல் பயண பெண்களின் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி கே.பழனிசாமி வருகை: பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாளைய மின்தடை: காளப்பநாயக்கன்பட்டி

பரமத்தி வேலூரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 5 அடி உயர வாழைத்தாா்!

அணுகு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

SCROLL FOR NEXT