செய்திகள்

'அஜித் ஒரு தீர்க்கதரிசி...': இயக்குநர் எச்.வினோத்

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர்

DIN

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ளனர். 

வலிமை படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்திற்காக இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. 

திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் எச்.வினோத்திடம் ‘அஜித் என்பவர் யார்’? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு ‘தீர்க்கதரிசி’ என பதிலளித்துள்ளார்.

முன்னதாக, இதே நேர்காணலில்  ‘ஒருவர் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக ஒட்டுமொத்தத் தொழிலையே பொதுமைப்படுத்தாதீர்கள். அஜித் சாருக்கு கூட இப்படி தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கிப் பேசுவது பிடிக்காது. அவரைப் பொறுத்தவரை படத்தின் வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. படக்குழுவினர் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும். மதிக்கப்பட வேண்டும். வெற்றி வரும் போகும் அதற்காக மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்பார்’ என வினோத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

SCROLL FOR NEXT