செய்திகள்

’நம்பவே முடியலை...’ டாம் க்ரூஸ் குறித்து நடிகர் சூர்யா

மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்த டாம் க்ரூஸின் விடியோவைக் கண்டு கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

DIN

மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்த டாம் க்ரூஸின் விடியோவைக் கண்டு கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்(60) தனக்கான ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடிக்கக் கூடியவர். 

இவர் நடிப்பில் வெளியான 'டாப் கன்’,  ‘மிஷன் இம்பாசிபிள்’ உள்ளிட்ட படங்களில் சில ஆபத்தான சண்டைக் காட்சிகளில் மாற்று (டூப்) இல்லாமல் இவரே நடித்திருந்தார்.

இந்நிலையில், டாம் க்ருஸ் மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக இருசக்கர வாகனத்துடன் மலையிலிருந்து கீழே குதிக்கும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்து அதன் மேக்கிங் விடியோவைப் பகிர்ந்திருந்தார். அதனைக் கண்ட பலரும் ஆச்சரியத்தில் டாம் க்ரூஸைப் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் சூர்யாவும் அந்த விடியோவைப் பகிர்ந்து ‘ஆஹா...நம்பவே முடியலை’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT