அதிரடி காட்சிகளில் கலக்கும் ‘ராங்கி’ த்ரிஷா
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர், முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசை சி.சத்யா. ஒளிப்பதிவு சக்திவேல். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டீசர் கடந்த 2019இல் வெளியான நிலையில் 3 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பட வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் டிச.30இல் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.