செய்திகள்

நடிகர் விஜய்யின் வருகையால் அதிர்ந்த அரங்கம்

 வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 

DIN

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யைக் காண ரசிகர்கள் காலை முதலே நேரு விளையாட்டரங்கத்தின் வாயிலில் குவிந்திருந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. 

இந்நிலையில் மாலை தொடங்கிய இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் சத்தத்திற்கு மத்தியில் வரவேற்றனர். நேரு விளையாட்டரங்கத்திற்குள் நுழைந்த நடிகர் விஜய் ரசிகர்களின் வரவேற்பை ஏற்கும் வகையில் அனைவரையும் பார்த்து கையசைத்தபடி தனது இருக்கைக்கு வந்தார். அவரின் வருகைக்கு எழுந்த பலத்த சத்தத்துடன் கூடிய விடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்துடன் மோதுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT