செய்திகள்

விஜய் சேதுபதி- கத்ரீனா நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ ரிலீஸ் எப்போது? 

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ஹிந்தி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ஹிந்தி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிரிஸ்துமஸ்'. 'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் தற்போது இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. டைகர் ஷெரிப் மற்றும் ரன்வீர் சிங் படங்கள் வருவதால் விஜய் சேதுபதி படம் தள்ளிப் போவதாக தெரிகிறது. 

தற்போது கிறிஸ்துமஸ் முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அடுத்தாண்டு விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. ஹிந்தி, தமிழில் இந்தப் படம் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT