செய்திகள்

’பொன்னியின் செல்வன் 2’ அதிகாரப்பூர்வ அப்டேட்!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான  ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் மற்ற பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும்  இப்படத்தை அடுத்தாண்டு(2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் ‘பொன்னியின் செல்வன்’ குறித்து புதிய அப்டேட்டை நாளை(டிச.28) மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா், மணிப்பூா் சம்பவங்களை ஒன்றுபடுத்தக் கூடாது: கே.எஸ்.அழகிரி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

மார்க் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தல்

தருமபுரியில் ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு

SCROLL FOR NEXT