செய்திகள்

’துணிவு’ டிரைலர் குறித்து தகவல்!

துணிவு திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

துணிவு திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிக்க: வாரிசு டிரைலர் எப்போது?

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா..சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடலும், கேங்ஸ்டா பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

துணிவு படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.  வானத்தில் ஸ்கை டைவிங் செய்து துணிவு படத்தின் அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் படக்குழுவினர் மிதக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை வருகிற டிச.31 ஆம் தேதி துபை புர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்.. டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்!

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

பிப். 21-இல் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா: பந்தல்கால் நடவு

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

SCROLL FOR NEXT