செய்திகள்

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபல நடிகை!

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று பிரபல நடிகை வருகையால் போட்டியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

DIN

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று பிரபல நடிகை வருகையால் போட்டியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் நானிமேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.

இந்நிலையில், 12-வது வாரம் தொடங்கியுள்ள நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களும் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்த ‘ஃப்ரீஸ், ரிலீஸ்’ டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று வருகிறது.

முதல் நாளான நேற்று, மைனா நந்தினி, அமுதவாணன் மற்றும் சிவினின் உறவினர்களும் நண்பர்களும் வருகை தந்து அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில் ரச்சிதாவின் தாயும், இரண்டாவது ப்ரோமோவில் மணிகண்டாவின் தாய், மனைவி, மகன் மற்றும் சகோதரி வருவது இடம்பெற்றுள்ளது.

மணிகண்டாவின் சகோதரி பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவார். அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழில் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை, தர்மதுரை, கனா, க.பெ.ரணசிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், பிக்பாஸ் போட்டியின் டிரெண்டிங் ஸ்டார்களான அஷீம் மற்றும் விக்ரமனின் குடும்பத்தாரின் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் புதிய பாடல் அப்டேட்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

SCROLL FOR NEXT