நடிகர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு 
செய்திகள்

நடிகர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

DIN

சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். நடிகர்கள் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்டது.

தற்போது கரோனா சூழல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியாவதற்குத் தயாராக இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுத் தேதியை அறிவித்து வருகின்றன. டான், ஆர்ஆர்ஆர் படங்கள் மார்ச் 25-ம் தேதி வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

SCROLL FOR NEXT