செய்திகள்

'காதலில் விழத் தயாராகுங்கள்': வருகிறது டானின் அடுத்த பாடல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படத்தின் அடுத்த பாடல் வரும் 3-ம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படத்தின் அடுத்த பாடல் வரும் 3-ம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டான். அனிருத் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒமைக்ரான் வருகை காரணமாக திரையரங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, மார்ச் 25-ம் தேதி படம் வெளியாகும் என புதிய வெளியீட்டுத் தேதியை படக் குழு அறிவித்தது.

இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் வரும் 3-ம் தேதி வெளியாகும் எனப் படக் குழு அறிவித்துள்ளது. காதலில் விழத் தயாராகுங்கள் என்ற அறிவிப்போடு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

டான் படத்திலிருந்து ஏற்கெனவே வெளியான ஜலபுல ஜங் பாடல் மெகா ஹிட் அடித்துள்ளது. இந்தப் பாடலின் மோகம் இன்னும் குறையாத நிலையில், தற்போது அடுத்த பாடல் வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT