செய்திகள்

தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்திரிப்பதாக மாளவிகா மோகனன் பகீர் புகார்: ரசிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

நடிகை மாளவிகா மோகனன் தனது புகைப்படத்தை சிலர் ஆபசமாக சித்திரித்து பகிர்வதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

DIN

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் பிகினி உடையில் இருக்கும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அவரை இணையதளங்களில் வைரலானது. இதனையடுத்து அவரது பெயர் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது. 

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள மாளவிகா பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ''இது என்னுடைய புகைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவர் ஆபாசமான முறையில் சித்திரித்து பதிவிட்டர். அதனை சிலர் பரப்பி வருகின்றனர். 

ஒரு குறிப்பிட்ட செய்தி நிறுவனமும் அதனைப் பகிர்ந்துள்ளது. நீங்கள் போலியான என்னுடைய புகைப்படத்தைப் பார்த்தால் புகார் அளியுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நடிகை மாளவிகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகை மாளவிகா மோகன் தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள மாறன் திரைப்படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ!

சுசுகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 9% அதிகரிப்பு!

க்யூட்... அனஸ்வரா ராஜன்!

ஆகஸ்ட்டில் நான்... சாக்‌ஷி மாலிக்!

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

SCROLL FOR NEXT