செய்திகள்

மீண்டும் இணையும் இயக்குநர்கள் அமீர் - வெற்றிமாறன்: அதிகாரப்பூர்வ தகவல்

இயக்குநர் வெற்றிமாறனுடன் இயக்குநர் அமீர் விரைவில் இணையவிருப்பதாக அறிவித்துள்ளார். 

DIN

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் அமீர் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதற்காக புகைப்படத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் வெற்றிமாறன் மற்றும் அமீருடன் இயக்குநர் தங்கம் இருக்கிறார். 

இதில் இயக்குநர் தங்கம், வெற்றிமாறனுடன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் தனக்கு அண்ணன் போன்றவர் என பல பேட்டிகளில் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தற்போது வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 

தற்போது அமீர் இயக்கும் இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சூரி நாயகனாக நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வந்தால்தான் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவரும். வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.  

வெற்றிமாறன் இயக்கிய 'வட சென்னை' படத்தில் ராஜன் என்ற வேடத்தில் அமீர் கலக்கியிருந்தார். இதனையடுத்து மீண்டும் இருவரும் இணையவிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT