முகப்பு
செய்திகள்

இந்த சின்னத்திரை நடிகைகளுக்கெல்லாம் குரல் கொடுப்பது இவரா? வைரலாகும் டப்பிங் பேசும் விடியோ

கோகுலத்தில் சீதை தொடரில் பின்னணி குரல் கொடுக்கும் விடியோவை அக்சயா பிரபா பகிர்ந்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

பிரபல சீரியல்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் அக்சயா பிரபா.  ரோஜா, சித்தி 2,  கோகுலத்தில் சீதை, ஈரமான ரோஜாவே, சத்யா, திருமதி ஹிட்லர், நினைத்தாலே இனிக்கும் என பெரும்பாலான தொடர்களின் நாயகிகளுக்கு இவர் தான் குரல் கொடுத்து வருகிறார். 

அந்தந்த கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப தனது குரலை மாற்றி  பேசுவது இவரது பலம். சமூக வலைதளங்களில் இவரது குரலுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டப்பிங் பேசும் அனுபவத்தை விடியோவாக பகிர்ந்து வருகிறார். 

இந்த நிலையில் தான் கோகுதலத்தில் சீதை தொடரில் முக்கிய காட்சி ஒன்றில் நாயகி ஆஷா கௌடாவிற்கு பின்னணி குரல் கொடுக்கும் விடியோவை பகிர்ந்துள்ளார். டப்பிங் என்பது கிட்டத்தட்ட நடிப்பு மாதிரிதான். காட்சியின் தன்மையை புரிந்துகொண்டு தன் குரலின் வழியே உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பாணியில் குரல் கொடுக்க வேண்டும். அதனை அக்சயா பிரபா சிறப்பாக செய்வதனால் தான் அவருக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments