செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் இசையில் பாடகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி பாடகராக அறிமுகமாகவிருக்கிறார். 

DIN

இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, சூர்யா தயாரித்துள்ள 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் தெலுங்கில் வருண் தேஜ் நடிக்கும் 'கணி' படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடல் நாளை (பிப்ரவரி 8) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் ஷங்கர் தனது 'பாய்ஸ்' படத்தில் இசையமைப்பாளர் தமனை நடிகராக அறிமுகப்படுத்தினார் என்பதும், ஷங்கர் தயாரித்த 'ஈரம்' படத்தில்தான் தமன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநர் ஷங்கரின் மகளை தமன் பாடகராக அறிமுகப்படுத்தவிருக்கிறார். 

மருத்துவம் படித்துள்ள அதிதி, சில மாதங்களுக்கு முன் பட்டம் பெற்றார். அப்போது தனது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் பகிர அது வைரலானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT