நடிகர் விஜய் - சிம்ரன் இணைந்து நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஜனவரி 29 ஆம் தேதியுடன் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இது இயக்குநருக்கு எழிலுக்கு முதல் படம்.
இந்தப் படம் காதலர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படம். குட்டியாக விஜய்யும், ருக்மணியாக சிம்ரனும் நடித்திருந்தனர். நேரில் பார்க்கும்போது சிம்ரனுக்கு விஜய் மீது வெறுப்பும், அவரது பாடல்களைக் கேட்டு விஜய் மீது மதிப்பும் உருவாகிறது. ஒரு கட்டத்தில் விஜய்யால் சிம்ரனின் கண் பார்வை பறிபோக, அவரை கவனித்துக்கொள்கிறார்.
இதையும் படிக்க | இயக்குநர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட மகேஷ் பாபு: காரணம் இதுதான்
சிம்ரனுக்கு கண்பார்வை வரும்போது செய்யாத குற்றத்துக்காக சிறை சென்றிருப்பார். சிறையிலிருந்து வெளியே வரும்போது சிம்ரனிடம் தான் யார் என்று தெரிவிக்க போராடும் அந்த கிளைமேக்ஸ் ரசிகர்கள் மனதை உருக செய்யும். இந்த காட்சியை சிறுவர்கள் அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.