3 மொழிகளில் வெளியானது வலிமை பட டிரைலர் 
செய்திகள்

3 மொழிகளில் வெளியானது வலிமை பட டிரைலர்

வலிமை திரைப்படத்தின் டிரைலர் இந்தி,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 3 மொழிகளில் இன்று வெளியானது.

DIN

வலிமை திரைப்படத்தின் டிரைலர் இந்தி,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 3 மொழிகளில் இன்று வெளியானது.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள், விசில் தீம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே தமிழில் வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் இந்தி,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 3 மொழிகளில் இன்று வெளியானது.

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளைப் புறாவொன்று... மதுமிதா!

திரு-மணக் கனவு... அபர்ணா தாஸ்!

இருமல் மருந்தினால் குழந்தைகள் பலி 20 ஆக உயர்வு; மருத்துவர்கள் போராட்டம்! ஏன் தெரியுமா?

அரசனில் இணையும் பிரபலங்கள்!

அயோத்தியில் தென்னிந்திய இசைக்கலைஞர்களின் சிலைகள்!

SCROLL FOR NEXT