விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தாவின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட டீசர் இதோ
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க | இயக்குநர் வினோத்துடன் அஜித் இருக்கும் புகைப்படம் வைரல்: விவரம் இதோ
Advertisement
இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஒருவர் இரண்டு பெண்களை காதலித்தால் என்னவாகும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.