செய்திகள்

'மகான்' பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜுக்கு போன் செய்த ரஜினிகாந்த்: என்ன சொன்னார் தெரியுமா?

மகான் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு பாராட்டு தெரிவித்தார்.

DIN

விக்ரம், துருவ் இணைந்து நடித்த மகான் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 10) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அவரது பதிவில், ''சிறப்பான திரைப்படம். நடிகர்களின் நடிப்பு அருமை. நேர்த்தியான பணி என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார். ரஜினிகாந்த்துக்கு மகான் மிகவும் பிடித்திருக்கிறது. தொலைபேசி மூலம் அழைத்து பாராட்டியதற்கு நன்றி தலைவா. நாங்கள் பெருமையாக உணர்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த்துக்கு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ரஜினி ரசிகராக பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் அவரைக் கையாண்ட விதம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT