மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ்: எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா ?
தனுஷ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:55 PM
தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் தனது மகன் யாத்ராவுக்கு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பீப் பாடல் விவகாரம்: நடிகர் சிம்பு மீதான வழக்கு ரத்து
Advertisement
தனுஷ் துள்ளுவதோ இளமையில் இருந்ததுபோல அவரது மகன் இருக்கிறார். அதனைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ஐஸ்வர்யாவுடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகு தனுஷ் தனது மகனுடன் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.