செய்திகள்

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் சூரியின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. 

DIN

நடிகர் சிவகார்த்திகேயன் எந்தத் திரையுலக பின்னணியும் இல்லாமல் குறுகிய காலத்தில் தமிழின் முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார். கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டபோது வெளியான டாக்டர் திரைப்படம் திரளாக மக்களை திரையரங்களுக்கு அழைத்து வந்தது மட்டுமல்லாமல் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இது அவர் மேல் மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு சான்று. 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இன்று (பிப்ரவரி 17) அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக நடிகர் சூரி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி என்று எழுதப்பட்ட கேக்கை வெட்ட செய்துள்ளார்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சூரி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மேடைகளில் சொல்வது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனை உண்மையான தம்பியாக கருதும் சூரியின் செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT