ரஜினிகாந்த் / அருண்ராஜா காமராஜ் 
செய்திகள்

ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கும் போனி கபூர்: இயக்குனர் அருண்ராஜா காமராஜா? நெருப்புடா....

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் 170வது திரைப்படத்தை கபாலியின் 'நெருப்புடா....' பாடலைப் பாடியவரும் 'கனா' திரைப்படத்தின் இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும், போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ரஜினி 169வது திரைப்படத்தை, கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தர்பார், பேட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து அனிருத் ரஜினி 169 திரைப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். 

இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட விடியோவால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், தற்போது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில் ரஜினி 170 திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இதனையொட்டி இணையத்தில் தலைவர் 170 என்ற ஹேஷ்டேக்கும் டிடெண்டாகி வருகிறது. அண்ணாத்த திரைப்படம் விமர்சனத்திற்குள்ளான நிலையில், ரஜினி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

SCROLL FOR NEXT