செய்திகள்

பயணிகளிடம் இப்படியா நடந்துக்குவிங்க? : விமானப் பணியாளர்கள் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு

சித்ரங்கடா சிங் என்ற ஹிந்தி நடிகை தனக்கு கோ ஃபர்ஸ்ட் என்ற விமானத்தில் நடந்த மோசமான அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராமில் பிகிர்ந்துள்ளார். 

DIN

சித்ரங்கடா சிங் என்ற ஹிந்தி நடிகை தனக்கு கோ ஃபர்ஸ்ட் என்ற விமானத்தில் நடந்த மோசமான அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராமில் பிகிர்ந்துள்ளார். 

அவரது பதிவில்,''கோஏர் விமான எண் 391 என்ற விமானத்தில் தில்லியிருந்து மும்பைக்கு சென்றேன். மிகவும் கோவமான, மோசமான பணிப்பெண்ணை சந்தித்தேன். சில பெயர்களைக் குறிப்பிட்டு நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுங்கள்.

அந்த பணியாளர் மிகவும் திமிருடன் நடந்துகொண்டார். விமான பணியாளர்கள் அனைவரது செயல்களும் ஏமாற்றமளித்தது. இதற்கு முன் ஏர் இந்தியாவிலும் இதுபோன்று நடந்தது என்று குறிப்பிட்டிருந்தார். 

அவரது மற்றொருபதிவில், இந்த சம்பவம் என்னருகில் இருப்பவருக்கு நடந்தது. என் அருகில் இருந்தவர் விமான பணிப்பெண்களால் மோசமாக நடத்தப்பட்டார். இத்தனைக்கு அந்த நபர் கண்ணியமாக இருந்தார். அந்த ஊழியர் மிகுந்த ஆணவத்தோடு நடந்துகொண்டார்'' என்று தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT