முகப்பு
செய்திகள்

'வலிமை' படத்துல நடிச்சதுக்காக இப்படியா? சின்னத்திரை நடிகையின் பதிவு வைரல்

வலிமை படத்தில் நடித்தது தொடர்பாக தனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருவதாக சைத்ரா தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சன் டிவியின் கயல் தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சைத்ரா வலிமை படத்தில் காவலராக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை படத்தில் நடித்ததற்காக தனக்கு வரவேற்பு கிடைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில் வலிமை படத்தில் நடித்ததற்காக எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள், மெசேஜ்கள் வந்தன. என் வேடத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கவில்லை. என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. வலிமை படத்து பார்த்துவிட்டீர்களா? உங்களது கருத்துக்களை பகிருங்கள்'' என்று தெரிவித்துள்ளார். 

வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் நடிகர் அஜித்துக்கும் இடையேயான மோதல்தான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் பைக் ரேஸ் தொடர்பான காட்சிகள் படத்துக்கு சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →