செய்திகள்

கிண்டலடித்து மீம்ஸ் பகிர்ந்தால் ரூ.10 கோடி வரை நஷ்ட ஈடு: பிரபல நடிகர் எச்சரிக்கை

DIN

தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபு நடிப்பில் சன் ஆஃப் இந்தியா என்ற படம் வெளியாகியிருந்தது. இந்தப் படம் குறித்து மோகன் பாபுவை விமர்சித்தும், கிண்டலடித்தும் மீம்ஸ்களும் பதிவுகளும் வைரலாகின. அவற்றில் பெரும்பாலானவை தனிப்பட்ட முறையில் மோகன்பாபுவை விமர்சிக்கும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மோகன் பாபு பற்றியும், விஷ்ணு மஞ்சு பற்றியும் கிண்டலடித்து பதிவுகளும் மீம்ஸ்களும் பரவி வருகின்றன.

அவை குறிப்பிட்ட எல்லை வரை இருந்தால் நாங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் நிறைய பதிவுகள் எல்லை மீறியதாக இருக்கின்றன. இவை சைபர் குற்றத்தின் கீழ் வரும். 

எங்களை குறித்து விடியோக்கள், பதிவுகள், மீம்ஸ்கள் ஆகியவற்றை பதிவிடுபவர்கள் மீது வழக்கு தொடரவிருக்கிறோம். மேலும் ரூ.10 கோடி வரை நஷ்ட ஈடு கேட்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT