செய்திகள்

விஜய் பட டிரெய்லரை 10,000 முறை பார்த்தாராம் நடிகை ரோஜாவின் மகன் : வைரலாகும் விடியோ

நடிகை ரோஜாவின் மகன் விஜய் பட டிரெய்லரை 10,000 முறை பார்த்ததாக தெரிவித்த விடியோ வைரலாகி வருகிறது. 

DIN


ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா தனது கணவர் இயக்குநர் செல்வமணி, மகள், மற்றும் மகன் கௌசிக்குடன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். 

அப்போது ரோஜாவின் மகன் தனக்கு நடிகர் விஜய் மிகவும் பிடிக்கும் என்றார். மேலும் நடிகர் விஜய்யிடம் அவரது ஸ்டைல் பிடிக்கும் என்று கூறிய அவர், அவரது பட டிரெய்லரை 10,000க்கும் மேற்பட்ட முறை பார்த்ததாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜிமெயில் முகவரி கொண்டு அந்த டிரெய்லரை லைக் மற்றும் கமெண்ட் செய்வதாகவும் குறிப்பிட்டார். அதற்கு அருகிலிருக்கும் ரோஜா, 'விஜய் மகன் கூட இத்தனை முறை அவர் பட டிரெய்லரை பார்த்திருக்கமாட்டார்' என்றார். இந்த விடியோவை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

நடிகர் விஜய்யும், ரோஜாவும் இணைந்து நடித்ததில்லை. இருப்பினும் நெஞ்சினிலே படத்தில் தங்க நிறத்துக்கு தான் பாடலில் இருவரும் சேர்ந்து நடனமாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT