செய்திகள்

'பீஸ்ட்' இல்ல.... இது வேற 'அரபிக் குத்து': என்ன ஆட்டம்!? ஷிவானியின் நடன விடியோ வைரல்

அரபிக் இசைக்கு நடிகை ஷிவானி நாராயணன் நடனமாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி பாடிய அரபிக் குத்து பாடல் அதிரி புதிரி ஹிட்டடித்துள்ளது. பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடிகர் விஜய் போன்று நடனமாடி விடியோ பகிர்ந்து வருகின்றனர். இதில் வட இந்திய பிரபலங்களும் அடங்குவர். 

கடந்த 2 வாரங்களாக இந்தப் பாடல்தான் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் தனது நடன விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில் அரபிக் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் ஷிவானி, தனது  பதிவில், தென்னிந்தியர்கள் இப்படித்தான் அரபிக் இசைக்கு நடனமாடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷிவானியின் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எல்லோரும் பீஸ்ட் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாட, இவர் மட்டும் வேறு அரபிக் பாடலுக்கு நடனமாடுகிறாரே என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT