முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

சிவகார்த்திகேயனின் டான் பட தொலைக்காட்சி உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சிவகார்த்திகேயன் லைக்கா புரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, நடித்துள்ள படம் டான். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

டாக்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, மிர்ச்சி விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் வருகிறாராம். 

இந்தப் படம் மார்ச் 25 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாம். டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படம் வெளியாகவிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.