செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்காக வலிமை படத்தின் சிறப்புக் காட்சி

வலிமை படத்தின் சிறப்புக் காட்சியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.  

DIN


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தர்ஷா என்பவர் புதுச்சேரி அஜித் ரசிகர்கள் சார்பாக ஆதரவற்ற 150 குழந்தைகளுக்காக வலிமை பட சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. மேலும் 5வது நாளான இன்றும்(பிப்ரவரி 28) வலிமை படம் பார்க்க திரையரங்குகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். 

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் ஐயப்பா, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகள் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்தப் படத்தில் முதல் பகுதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பகுதி சற்று மெதுவாகவும் செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT