செய்திகள்

''இத வெளிய சொல்லாதீங்க, எனக்கு வயசாகிடுச்சுனு நினைப்பாங்க'' - பிக்பாஸில் நகைச்சுவையாக பேசிய சிம்பு

சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்திருப்பதாக பிக்பாஸ் பாலா தெரிவித்தார். 

DIN

விக்ரம் படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகிக்கொள்ள சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியை தனது பாணியில் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றார் சிம்பு. 

நிகழ்ச்சியில் சிம்புவிடம் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ், நான் சிறுவனாக இருக்கும்போது வல்லவன் படத்தில் உங்களுக்கு பின்னால் நடனமாடியிருக்கிறேன் என்று சொன்னார். 

அவருக்கு பதிலளித்த சிம்பு, இப்போது இத சொல்லாதீங்க. மக்கள் எனக்கு வயசாகிடுச்சுனு நினைப்பாங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 

பின்னர் கமல்ஹாசன் குறித்து பேசிய அவர், பிக்பாஸ் இசையைக் கேட்டதும் அனைவின் நினைவுக்கு வருவது கமல் சார்தான். கமலுக்கு பதிலாக நான் இங்கு வரவில்லை.

தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நிகழ்ச்சியை தொடரமுடியவில்லை. அவர் மீது கொண்ட மதிப்பு காரணமாகவும், எனக்கும் பிக்பாஸ் மிகவும் பிடிக்கும் என்பதாலும் நான் இங்கு வந்தேன் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT