செய்திகள்

புகைப்படம் மூலம் காஜல் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த கணவர் : ரசிகர்கள் வாழ்த்து

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் கௌதம் கிச்சுலு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். 

DIN

கடந்த சில ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ளார். 

தற்போது தமிழில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ள ஹே சினாமிகா மற்றும் கோஸ்ட்லி, கருங்காப்பியம் உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து  வெளியாகவுள்ளன. நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை ஒரு வருடத்துக்கு முன் திருமணம் செய்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதுகுறித்து அவர் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் கிச்சுலு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காஜல் அகர்வாலின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், 2022ஐ எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டு கர்ப்பமாக இருக்கும் பெண் எமோஜியை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT