செய்திகள்

ஓடிடியில் தனியாக பிக்பாஸ் : பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்களா ?

பிக்பாஸ் நிகழ்ச்சி தனியாக ஓடிடியில் ஒளிபரப்பாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

இந்த நிலையில் ஹிந்தியில் இந்த வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தனியாக ஓடிடியில் வெளியானது. குறைவான போட்டியாளர்கள், வெறும் 40 நாட்கள் என இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தனியாக ஓடிடியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வார்கள். 

இந்த நிலையில் பிக்பாஸ் ஓடிடியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வனிதா, ஜுலி, ஓவியா உள்ளிட்டோர் மீண்டும் பிக்பாஸில் கலந்துகொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT