சென்னை சர்வதேச திரைப்பட விழா 
செய்திகள்

நாளையுடன் (ஜன.6) நிறைவடைகிறது 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் நடைபெற்று வரும் 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளையுடன் நிறைவடைகிறது.

DIN

சென்னையில் நடைபெற்று வரும் 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளையுடன் நிறைவடைகிறது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து 8 நாள்கள் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  உலகின் 53 நாடுகளிலிருந்து மொத்தம் 121 திரைப்படங்கள் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன.

இந்நிலையில் நாளையுடன் சர்வதேச திரைப்பட விழா நிறைவடைய உள்ள நிலையில் சினிமா ரசிகர்களும், ஆர்வலர்களும் திரைப்பட விழாவில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு மாற்று மொழிப் படங்கள் திரையிடப்பட்டு வருவது பயனுள்ளதாக அமைந்திருப்பதாக திரைப்பட ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை மாலை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியுடன் சர்வதேச திரைப்பட விழா நிறைவடைய உள்ளது. கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதால் ஒவ்வொரு காட்சிக்கும் முன்கூட்டியே வருகை தரும் பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையிடலைக் காண அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

SCROLL FOR NEXT