செய்திகள்

சத்தமில்லாமல் தனது அடுத்த படத்தை இயக்கி முடித்த பா.ரஞ்சித்: அதிகாரப்பூர்வ தகவல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.  

DIN

சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராமன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக  சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாயநாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்துக்கு இசையமைத்த தென்மா, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். முதலில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் கலையரசன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாண்டி இந்தப் படத்துக்கு நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

எண்ணூா் அனல் மின் நிலைய விபத்து! 3 பேர் மீது வழக்கு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படை!

இந்தியாவிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சர் நிபந்தனை!

SCROLL FOR NEXT