செய்திகள்

அர்ஜுன் தாஸின் பெற்றோரை சந்தித்த சூர்யா : உருக்கமான பதிவு

தனது பெற்றோரை சந்தித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு நடிகர் அர்ஜுன் தாஸ் நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

கைதி படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அர்ஜுன் தாஸ். பின்னர் அவர் நடித்த அந்தகாரம் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

நடிகர் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இவர் நடித்துள்ள புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜி திரைப்படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு அர்ஜுன் தாஸ் நன்றி தெரிவித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், 

அந்தப் பதிவில், ''உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என்னைப் போலவே என் பெற்றோர்களும் உங்களின் தீவிர ரசிகர்கள். உங்களை சந்தித்ததில் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நீங்கள் நீங்களாக இருப்பதற்கு நன்றி.

நீங்கள் என்னை தெரியும் எனவும், நான் நன்றாக இருக்க வேண்டும் எனவும் நீங்கள் என்னைப் பற்றி சொன்னது அவர்களை பெருமையாக உணர செய்திருக்கிறது. மேலும் எனது பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT