சாய்னா-சித்தார்த் 
செய்திகள்

சாய்னா குறித்து சர்ச்சை கருத்து: நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.    

DIN

நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.    

இந்த நிலையில் பஞ்சாப் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ஆதரவாக இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நோவால் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளால் நான் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டு சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். 

அதற்கு பதிலளிக்கும் சித்தார்த்தின் பதிவு பாலியல் ரீதீயாக சாய்னாவை இழிவுபடுத்துவதாக கண்டனம் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக பாடகி சின்மயி, குஷ்பு போன்றவர்கள் கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநில காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும், நடிகர் சித்தார்த்-க்கும் தனிப்பட்ட முறையில் மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில் ‘உங்கள் கருத்து  பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் உள்ளது. ஒரு பெண்ணுக்கு எதிரான இதுபோல மோசமான, பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் ’ எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT