செய்திகள்

இயக்குநர் சசி - ஹரிஷ் கல்யாண் பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்

இயக்குநர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறு கோடி வானவில் பட டீசரை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். 

DIN

சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு பிறகு இயக்குநர் சசி இயக்கும் படம் நூறு கோடி வானவில். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். 

முழுக்க முழுக்க காதல் சார்ந்த திரைப்படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கலை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.25 மணிக்கு வெளியிடுகிறார். 

இந்தப் படத்துக்கு சித்து குமார் இசையமைக்க, பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு!

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அரக்கோணம் பஜாா் வரசித்தி விநாயகா் கோயிலில் ஸ்ரீசுப்பிரமணியா் திருக்கல்யாணம்

குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது தமிழா்களுக்குப் பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT