செய்திகள்

சிரஞ்சீவியின் ஆச்சாரியா வெளியீடு ஒத்திவைப்பு - சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ?

சிரஞ்சீவியின் ஆச்சாரியா வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

DIN

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருந்த நடிகர் அஜித்தின் வலிமை, ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து சிறிய முதலீட்டில் உருவான படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. 

இந்த நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருந்த சிரஞ்சீவி - ராம் சரண் இணைந்து நடித்த ஆச்சாரியா படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ''கரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதால் ஆச்சரியா படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். எல்லோருக்கும் சங்கராந்தி நல்வாழ்த்துகள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடும் தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2032-க்குள், ரூ. 75,000 கோடி முதலீடு இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல்!

ரஜினி - கமல் திரைப்படத்திற்குத் தயாராகும் லோகேஷ் கனகராஜ்?

தமிழக காடுகளில் 3,170 யானைகள்: அமைச்சர் தகவல்!

காரைக்கால் மீனவா்கள் மீது ஆந்திர மீனவா்கள் தாக்குதல்: 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு

SCROLL FOR NEXT