லதா மங்கேஷ்கர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது: மருத்துவர்கள் தகவல்
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லதா மங்கேஷ்கருக்கு கடந்த 11-ம் தேதி கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டது.
இதையும் படிக்க | பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா
அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதால், தற்போதைய நிலையில் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தேறி வருவதற்கான அறிகுறிகள் தென்பட இன்னும் சிறிது காலம் எடுக்கும் என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
13 வயதில் 1942-இல் பாடல்கள் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர் பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.