பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் மறைவுக்கு பிறகு புதிய முல்லையாக களமிறங்கினார் காவ்யா அறிவுமணி. துவக்கத்தில் அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பின்னர் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில் காவ்யா அறிவுமணி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படமான ரிப்பப்பரி படத்தில் தான் காவ்யா அறிவுமணி நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடமாம்.
இந்தப் படத்தை ஏகே இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தில் யூடியூப் பிரபலம் மாரி, சூப்பர் டிலக்ஸ் நோபிள் ஜேம்ஸ், நக்கலைட்ஸ் செல்லா மற்றும் தனம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு திவாகரா தியாகராஜன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக ஆரத்தி என்ற புதுமுகம் நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.