செய்திகள்

'வலிமை' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி ?

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் அஜித் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக அஜித் படம் வெளியாகமலிருந்த நிலையில் வலிமை படத்தின் வெளியீட்டு அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

இந்த நிலையில் கரோனா பரவல் உச்சமடைந்ததால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. வலிமை மட்டுமல்லாமல் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகளை முன்னிட்டு வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற படங்களின் வெளியீட்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராதே ஷ்யாம் திரைப்படமும் மார்ச் 18ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக வலிமை திரைப்படத்தை சற்று முன்னதாக மார்ச் 4 ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT