செய்திகள்

முற்றிலும் புதிய தோற்றத்தில் பிரபல நடிகர்: வெளியான விடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

முற்றிலும் புதிய தோற்றத்தில் பிரபல நடிகர் இருக்கும் விடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

DIN

தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நவதீப். அந்தப் படம் வெற்றிபெற்றாலும் நவதீப்புக்கு தொடர்ந்து தமிழில் சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தினார். 

தமிழில் அஆஇஈ, ஏகன், இது என்ன மாயம் போன்ற படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். இந்த நிலையில் நவதீப் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை நடிகர் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார். லவ் மௌலி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் தலைப்பை அறிவிக்கும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் நவதீப் முற்றிலும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் இருக்கிறார். அவநீந்திரா இயக்கும் படத்துக்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். நவதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT