செய்திகள்

சிறிய முதலீட்டில் உருவாகி வசூலை வாரிக் குவிக்கும் மோகன்லால் மகனின் ஹிரிதயம்

மோகன்லால் மகன் பிரணவ் நடித்து திரையரங்குகளில் வெளியான ஹிரிதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

வினித் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் நாயகனாக நடித்துள்ள ஹிரிதயம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்தப் படத்தில் நடிகரும் கதாசிரியருமான ஸ்ரீநிவாசனின் மகன் வினித் ஸ்ரீநிவாசன் இயக்க, மோகன்லாலின் மகன் பிரணவ் நாயகனாகவும், இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நாயகியாகவும் நடித்துள்ளதால் இது வாரிசுகளின் படமாக அமைந்துள்ளது. 

இந்தப் படம் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகக் குறைந்த முதலீட்டில் உருவான இந்தப் படம பல மடங்கு அதிகமாக வசூலித்துள்ளதால்  இந்த ஆண்டின் முதல் பெரிய வெற்றிப்படமாக ஹிரிதயம் அமைந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெருந்துறையில் ரூ.4.01 கோடிக்கு கொப்பரை ஏலம்

மொடக்குறிச்சி அருகே புதிய நியாயவிலைக் கட்டடம் திறப்பு

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

ஈரோட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 2 ஆவது நாளாக மறியல்

ஈரோட்டில் முழுமையான புற்றுநோய் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: த. ஸ்டாலின் குணசேகரன்

SCROLL FOR NEXT