செய்திகள்

அருண் விஜய்க்கு வாழ்த்துசொன்ன சிவகார்த்திகேயன்

யானை படம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துதெரிவித்துள்ளார். 

DIN

யானை படம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துதெரிவித்துள்ளார். 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் இன்று (ஜூலை 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. உறவினர்களான இருவரும் முதன்முறையாக இணைந்துள்ளதால் யானை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க, கோபி நாத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, அம்மு அபிராமி, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துகள் அண்ணா என பதிலளித்துள்ளார். 

இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இருவரும் இயல்பாக சமூக வலைதளங்களில் உரையாடிக்கொள்வது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அருள்நிதியின் டி பிளாக் திரைப்படமும் இன்று வெளியாகவுள்ள நிலையில் அவருக்கும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT