செய்திகள்

சுந்தர்.சியின் காபி வித் காதல் 'ரம் பம் பம் முழு பாடல் இதோ! இளையராஜா - யுவன் கலக்கிட்டாங்க !

இளையராஜா - யுவன் இசையில் காபி வித் காதல் ரம் பம் பம் முழு பாடல் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 

DIN

இளையராஜா - யுவன் இசையில் காபி வித் காதல் ரம் பம் பம் முழு பாடல் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 

சுந்தர்.சி தற்போது ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் காபி வித் காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். யுவன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி - யுவன் கூட்டணி இந்தப் படத்துக்காக இணைந்திருப்பதால் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

இந்தப் படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படப் பாடலான ரம் பம் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் ப்ரமோ விடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் முழு பாடலும் வெளியாகியுள்ளது.

பாடலில் படப்படிப்பு தளத்தில் நடந்த கலாட்டாக்களும் காட்டப்படுகிறது. அது சுந்தர்.சியின் உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு போல முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருக்கும் என்ற நம்பிக்கையளிக்கிறது. பாடலின் இறுதியில் யுவனும் இணைந்து நடனமாடுவது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். 

காபி வித் காதல் படத்தில் மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், சம்யுக்தா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லே ஆகியோர் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளனர். 

முன்னதாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடலை டிக்கிலோனா படத்துக்காக யுவன் பயன்படுத்தியிருந்தார். அந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. அதேப் போல ரம் பம் பம் பாடலும் மிகப்பெரிய வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

SCROLL FOR NEXT