ஸ்பாடிஃபை நிகழ்ச்சியில் மா கா பா, ஷாந்தனு, கிகி 
செய்திகள்

புதிய பாட்காஸ்ட்களை இலவசமாக வழங்கும் ஸ்பாடிஃபை

தமிழில் மூன்று புதிய பாட்காஸ்ட்களை இலவசமாக வழங்குவதாக ஸ்பாடிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

தமிழில் மூன்று புதிய பாட்காஸ்ட்களை இலவசமாக வழங்குவதாக ஸ்பாடிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது. அவை - ஷாந்தனு, கிகியுடனான ஜாலியோ ஜிம்கானா, மை டியர் மா கா பா, கிரைம் ஸ்பாட் - இது ஒரு ரிஷிபீடியா பாட்காஸ்ட்.

உலகின் சிறந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது ஸ்பாடிஃபை நிறுவனம். இந்தியாவிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. கடந்த வருடம் முதல் ஸ்பாடிஃபை செயலியுடன் தமிழ்நாட்டுக் கலைஞர்களான ஆர்ஜே பாலாஜி, ஆஜே ஆனந்தி, ஆர்ஜே ஷா, கிஷன் தாஸ் போன்றோர் இணைந்துள்ளார்கள். தமிழில் நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக இம்முயற்சியை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. ஸ்பாடிஃபை இந்தியா நிறுவனம் 2019-ல் தொடங்கியதிலிருந்து தமிழ் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஸ்பாடிஃபை இந்தியா நிறுவனத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் துருவங்க் வைத்யா இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள், கலாசாரங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் காரணமாக பல்வேறு வழிகளில் நேயர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொள்கிறோம். எங்களுடைய வளர்ச்சியில் தமிழ் நேயர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். 

செயலியைத் தொடங்கியது முதல், பாட்காஸ்ட் உள்ளிட்ட தமிழுக்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறோம். அதிகாரபூர்வமான இசை, நிகழ்ச்சிகளை தமிழ் நேயர்களுக்கு வழங்க எண்ணுகிறோம். இதற்காக பாட்காஸ்ட் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

SCROLL FOR NEXT