செய்திகள்

ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய ரன்வீர் - தீபிகா தம்பதி - ஏன் அவ்வளவு விலை?

நட்சத்திர தம்பிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதியினர் ரூ.119 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

DIN

நட்சத்திர தம்பிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதியினர் ரூ.119 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஹிந்தி நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்திய அணி உலக கோப்பை வென்ற 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட 83 படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாகவும், தீபிகா அவரது மனைவியாகவும் நடித்து அசத்தினர். 

ரூ.119 கோடியில் வீடு

இந்த நிலையில் இருவரும் ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. 

மும்பை பந்தரா பகுதியில் உள்ள சாகர் சேகம் அடுக்குமாடி குடியிருப்பில் 16,17,18,19 ஆகிய தளங்களை ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியினர் வாங்கியிருக்கின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் நடிகர் ஷாருக்கானின் வீடும் நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பும் அமைந்துள்ளதாம்.

ஏன் இவ்வளவு விலை ?

கடற்கரையைப் பார்த்து அவர்கள் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது 11,266 சதுர அடி அளவுக்கான இடத்தையும், 1,300 சதுர அடி அளவுள்ள மொட்டை மாடியையும் வாங்கியுள்ளனர். அந்தப் பகுததியில் ஒரு சதுர அடி ரூ.1 லட்சம் அளவுக்கு விலை போகிறதாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT