முகப்பு
செய்திகள்

’இந்திய சினிமா பெருமைப்பட வேண்டும்’ இரவின் நிழல் குறித்து பிரபல இயக்குநர் கருத்து

இரவின் நிழல் படத்திற்காக இந்திய சினிமா பெருமைப்பட வேண்டும் என பிரபல இயக்குநர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

இரவின் நிழல் படத்திற்காக இந்திய சினிமா பெருமைப்பட வேண்டும் என பிரபல இயக்குநர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. தற்போது இப்படத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கான காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் “இரவின் நிழல் மனதைக் கவர்ந்த சினிமா அனுபவம், அற்புதமான சாதனை. இந்திய சினிமா பெருமைப்பட வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழலில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →